அமெரிக்க அரசின் முடிவு! இலங்கையிலிருந்து விடைபெறும் ஜூலி சங்
இலங்கைக்கான தற்போதைய அமெரிக்க தூதுவரான ஜூலி சங் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உள்ள தூதுவராக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சிறப்புமிக்க சேவைக்குப் பிறகு அவர் இலங்கையை விட்டு இவ்வாறு வெளியேறவுள்ளார்.
வலுவான அடித்தளம்
அவரது பதவிக் காலத்தில், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ஜனநாயகம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.

இலங்கையுடனான தனது கூட்டாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதுடன், தூதுவர் சங்கின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் நிறுவப்பட்ட வலுவான அடித்தளத்தை மேலும் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவு
இந்த நிலையில், புதிய அமெரிக்க தூதுவர் வரும் வரை பிரதி தூதுவரான ஜேன் ஹோவெல் அந்த பதவியில் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதுவர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்