தொடருந்தின் மிதிபலகையில் நின்றவர் கம்பத்துடன் மோதி படுகாயம்!
Kalutara
Accident
Railways
By pavan
தொடருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதானையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்தபோதே களுத்துறை பகுதியில் உள்ள ஒளி சமிக்ஞை கம்பத்துடன் குறித்த நபர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வைத்தியசாலையின் அனுமதி

ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதிய நபர் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.