யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி

Sri Lanka Police Accident
By pavan Sep 03, 2023 12:50 PM GMT
Report

யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி | Accident Police Investigating Srilanka Jaffna

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திரும்புவதற்கு சமிக்ஞை காண்பித்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த குறித்த இளைஞனது மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த தொலைபேசி தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

காவல்துறை விசாரணை 

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி | Accident Police Investigating Srilanka Jaffna

அவரது சடலம் தற்போது சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026