யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி! மனைவி படுகாயம்
Jaffna
Accident
By Vanan
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம்(5) ஹயஸ் வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
விசாரணை

அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த அற்புதசிங்கம் சுதர்சன் (வயது 39) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி