யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Vanan
யாழ்ப்பாணத்தில் விபத்து
யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
இந்த விபத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையிலும், 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி