பங்களாதேஸில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
பங்களாதேஸில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(25.03.2026) மாலை இடம்பெற்ற நிலையில், இந்த பயங்கர விபத்தில் இதுவரை 18 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஷ்டியாவிலிருந்து டாக்கா நோக்கி சென்ற ஷோஹார்தோ பரிபோஹன் என்ற பேருந்து, ஃபெர்ரியில் ஏறும் போது கட்டுப்பாட்டை இழந்து நதிக்குள் விழுந்துள்ளது.
बांग्लादेश के दाउलतदिया 3 नंबर फेरीघाट पर सौहार्द परिवहन की बस नियंत्रण खोकर पद्मा नदी में गिर गई। बस में लगभग 40 यात्री सवार थे। कई यात्री पानी में डूब गए हैं और बचाव अभियान जारी है।
— Maharashtra Bandhu News (@BandhuNews_in) March 25, 2026
🕔 घटना: 25 मार्च 2026, शाम करीब 5:15 बजे
📍 स्थान: Daulatdia Ferry Ghat, Padma River,… pic.twitter.com/jTfey45zRs
40 பயணிகள்
பேருந்தில் குறைந்தது 40 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மீட்கப்பட்ட 18 உடல்களில் 10 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் அடங்குவதாக அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் சிவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காணாமல் போயிருக்கலாம் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இரவு சுமார் 11:15 மணியளவில் மீட்புக் கப்பல் மூலம் குறித்த பேருந்து 80-90 அடி ஆழத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பயணிகள் (சுமார் 11 பேர்) நீந்தி கரை சேர்ந்ததாகவும், சாரதி ஜன்னல் வழியாக தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |