தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து - 10 வாகனங்கள் கடும் சேதம்
southern-expressway
accidents
vehicles damaged
By Jaso
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற 3 விபத்துக்களில் 10 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தொடங்கொட 34 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துக்களால் லொறி, 3 சொகுசு பஸ்கள், 3 SUV ரக வாகனங்கள் மற்றும் 4 கார்கள் சேதமடைந்துள்ளன.
நெடுஞ்சாலையின் எதிர்ப்புறத்தில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தை சோதிப்பதற்காக திடீரென பிரேக் போடப்பட்ட கார் மீது பின்னால் வந்த வாகனங்கள் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.