இலங்கையில் 111 வருடங்களின் பின்னர் புதுப்பிக்கப்படும் சட்டம்..!
1912 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவரிக் கட்டளைச் சட்டம், 111 வருடங்களின் பின்னர் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனை, அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துதல், குறித்த உரிமப்பத்திரங்களை வழங்குதல், மற்றும் வரி விதிப்பனவுகள் தொடர்பான மதுவரிக் கட்டளைச் சட்டம் மற்றும் புகையிலை வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மதுவரிச் சட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான முன்மொழிவு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் மூலம் நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவை அங்கீகாரம்

அதற்கமைய, குறித்த கருமத்திற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு, சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிபர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.