ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : இராதாகிருஷ்ணன் சவால்

Ranil Wickremesinghe Sajith Premadasa V S Radhakrishnan Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 10, 2024 12:00 PM GMT
Report

ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் (V. Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

இன்று (10.08.2024)  இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் (Up-Country People's Front) தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்

ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது

மேற்படி கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

மலையக மக்களுக்கு 1988 இல் ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) ஆட்சிக்காலத்தில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரே அவர்களால் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்குரிய வாய்ப்பு கிட்டியது. அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : இராதாகிருஷ்ணன் சவால் | Action Against The Slpp Mps Supporting Ranil

பிரேமதாசவின் இந்த நடவடிக்கையால்தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே, அதற்கான நன்றி கடனாகவும் நாம் சஜித்தை ஆதரிக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், நாட்டில் நல்லாட்சியே இடம்பெற வேண்டும், அதனை சஜித் செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) ஊழலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கள்ளவர்கள் எல்லாம் இன்று அவர் பக்கமே அணிதிரண்டுள்ளனர்.

சஜித் கீழ்மட்டத்திலிருந்து வந்தவர், எனவே, அவருக்கு மக்களின் வலி, வேதனை நன்கு புரியும், அதற்கேற்ற வகையில் வகையில் உரிய முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

சுமந்திரனை சந்தித்த நாமல் ராஜபக்ச

சுமந்திரனை சந்தித்த நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த இருவர்

அதேவேளை, கட்சி முடிவை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB)நடவடிக்கை எடுத்தது. இதனால் ஹரின் பெர்னாண்டோ, (Harin Fernando) மனுச நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : இராதாகிருஷ்ணன் சவால் | Action Against The Slpp Mps Supporting Ranil

ராஜபக்சவின் சகாக்கள் இன்று ரணிலுடன் உள்ளனர், எனவே, ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவால் விடுக்கின்றேன்.“ என தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரன், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களின் பதவிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களின் பதவிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026