ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை : மீறினால் நடவடிக்கை
தாம் கடமையாற்றும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கே இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட தடை
இவ்வாறு விதிக்கப்பட்ட தடை பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பின்னர், வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை, கல்விப் பணிப்பாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கை ஆரம்பத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் மத்திய மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |