போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள்

Tamil Cinema Sri Lanka India Nothern Province Tamil Actors
By Kathirpriya Dec 25, 2023 11:37 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்த ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட போண்டா மணி கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (23) உயிரிழந்த இந்த நகைச்சுவை நடிகரின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்கையில் அவருக்கும் இலங்கைக்கும் ஈழத்திற்குமான தொடர்புகள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கின்றதென்று தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் பிறந்த போண்டா மணி, இவருடன் 16 பேர் பிறந்துள்ளனர், ஈழத்தை உலுக்கிய இனக்கலவரம் இந்தப் பெரிய குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை, ஈழத்தில் நடந்த இனக்கலவரத்தில் இவரது குடும்பத்தை சேர்ந்த, 8 பேர் இறந்து போயுள்ளனர்.  

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலையில் விடுதலையாகிய கைதிகள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலையில் விடுதலையாகிய கைதிகள்

 இலங்கை போரில் உயிரிழந்துள்ளனர்

அது மாத்திரமன்றி அவரது தாய்-தந்தையர் கூட இலங்கை போரில் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்தக் கலவரத்தில் போண்டா மணியின் இரண்டு கால்களிலும் குண்டடி பட்டுள்ளது.

அதில் ஒரு காலில் இருந்த குண்டினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாகவும், இன்னொரு காலில் இருந்து குண்டை அகற்ற முடியாததால் நடக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி போரினால் பாதிக்கப்பட்ட போதிலும், அந்த இயலாத காலுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளார்.

போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள் | Actor Bonda Mani Birthplace Truth Revealed

குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலின் மத்தியில், தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

யாழில் கசிப்புடன் கைதான 34 வயது பெண்

யாழில் கசிப்புடன் கைதான 34 வயது பெண்

சிறுநீரகங்கள் பாதிப்பு

ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணி, ஒரு படப்பிடிப்பின் போது சாக்கடையில் விழுந்ததில், கழிவுநீரை பருகும் சூழல் உருவானது.

இதனால் அவரது இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள் | Actor Bonda Mani Birthplace Truth Revealed

அவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் நிதி உதவி அளித்த நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பின், போண்டா மணி மீண்டு வந்தார், நீண்ட ஓய்வுக்குப் பின் தேறி வந்த போண்டா மணி, அதன் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இருப்பினும் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காத போதும், குடும்ப சூழல் காரணமாக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார்,

இரகசியத்தை மறைக்கும் மகிந்த: ஏப்ரலில் அம்பலமாகும் உண்மை(காணொளி)

இரகசியத்தை மறைக்கும் மகிந்த: ஏப்ரலில் அம்பலமாகும் உண்மை(காணொளி)

ஏற்கனவே உயிர் பிரிந்ததாக

இந்நிலையில் நேற்று முன் தினம் (23) இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள் | Actor Bonda Mani Birthplace Truth Revealed

பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.

ஈழத்தில் பிறந்து தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த பாேண்டா மணியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025