பாதாள உலகின் ஆட்டம் : இந்தியா - இலங்கை பாலம் குறித்து எச்சரிக்கும் மல்வத்து பீடாதிபதி
இந்தியா (India) மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால் சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த விடயத்தை மல்வத்து விகாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் பேரழிவு வாய்ப்பு
இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதன்போது, நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர்கள்
இதேவேளை இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது.
இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 51 நிமிடங்கள் முன்
