மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிபதி விடுத்துள்ள உத்தரவு!
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதிவரைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடுசெய்வதை தடுக்ககோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது குறித்த வழக்கு தொடர்பாக மேலதிகமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முதல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.



