யாழில் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய அநுர

Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Election
By Thulsi Nov 11, 2024 04:49 AM GMT
Report

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரதேசத்திற்கு பிரச்சாரத்திற்கு ரணில் மற்றும் சஜித் யாழ்ப்பாணம் வந்தார்களா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண (Jaffna) பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று (10.11.2024) மாலை உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஒன்றிணையுமாறு கோரிக்கை

மேலும் தெரிவிக்கையில், பழைய அரசியல் கலாசாரங்களை மாற்றி, வடக்கு மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து இனங்களும் ஒரே கொடியின் கீழ் நல்லிணக்கத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்றும் அநுர குமார வலியுறுத்தினார்.   


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தாரா? நாம் வந்தோம்.

தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27,000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது.

யாழ்ப்பாணத்தில் நின்று புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்த அநுர

யாழ்ப்பாணத்தில் நின்று புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்த அநுர

மக்களை ஒன்றிணைக்கவில்லை

ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது. எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை.

யாழில் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய அநுர | Adk Election Meeting In Jaffna

ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள்.மக்களை ஒன்றிணைக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம். தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது.

நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது. நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம்.

புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்தத அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம்.

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்

மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்