பெண்களுக்கு மீண்டும் ஆபத்து - வெளியானது சர்வதேச ஆய்வுகளின் முடிவுகள்
பெரியவர்கள், பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நபர்கள், மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மீண்டும் தொற்றுக்குள்ளாகும் அதிக ஆபத்தில் உள்ளனர் என சமீபத்திய வெளிநாட்டு ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் மூலக்கூற்று துறையின் இயக்குனர் டாக்டர் சந்திமா ஜீவந்தர (Dr. Chandima Jeewandara) இதை டுவிட் செய்துள்ளார்.
இவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.
இதற்கிடையில், பூஸ்டர் தடுப்பூசியை பெற்ற ஆன்டிபாடி அளவுகளில் கணிசமான உயர்வு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் நம்புவதை விட மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும்.
பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வரையறுக்கப்படாததால் இது இலங்கையில் எந்தளவுக்கு சாத்தியம் என்பதை தற்போதைய சூழலில் கணிப்பது கடினம்.
எவ்வாறாயினும், தடுப்பூசி போடப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.