வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
புதிய இணைப்பு
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்தந்தப் பிரதேசங்களில் நிலவும் இடர் நிலைமை மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது அல்லது தொடர்ந்து நடத்துவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்வதற்கு, ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்தந்தப் பிரதேசத்தின் சூழலுக்கேற்ப உடனடித் தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ளமுடியும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
நெடுந்தீவில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
உலங்கு வானூர்தி
பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற விடைத்தாள் நேற்று (26) சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக எடுதுச்செல்ல முடியாமையால் விசேடமாக உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் க. பொ.த உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள் எடுத்துச்செல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


