உடல் எடை அதிகமா? இனி கவலையே வேண்டாம் - இதனை மட்டும் செய்யுங்கள் பின்னர் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்
இப்பொழுது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினை உடல் பருமன்.
நம் உணவு முறை மாற்றத்தினால் உடல் பருமன் பெரும் பிரச்சினையாக எல்லோருக்கும் இருந்து வருகிறது.
இதனை ஆரோக்கியமான முறையில் பண விரையமின்றி சரி செய்யக் கூடிய அற்புத ஆற்றல் காற்றாழை ஜூஸுக்கு உண்டு. வீட்டில் கற்றாழை இருந்தால் தினமும் இது போல் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் உடம்பில் இருக்கும் கழிவுகளை நீக்கி புத்துணர்வு பெற செய்யும்.
இதிலிருக்கும் நீர் சத்து நம் உடலை டீஹைடிரேஷன் ஆகாமல் பாதுகாக்கும். இத்தகைய அற்புதம் வாய்ந்த கற்றாழை ஜூஸ் இலகுவாக செய்வது எப்படி?
கற்றாழை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
கற்றாழை - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், இஞ்சி - 10 கிராம், எலுமிச்சை - பாதி மூடி, தேன் - 2 டீஸ்பூன்( தேக்கரண்டி), தண்ணீர் - 3 கப்.
கற்றாழை ஜூஸ் செய்முறை விளக்கம்
முதலில் ஒரு கற்றாழையை எடுத்து வந்து அதன் தோலை சீவி உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை தனியாக எடுத்து ஐந்து நிமிடம் வரை தொடர்ந்து தண்ணீரில் கழுவுவது நல்லது. 6 லிருந்து 7 முறை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவ வேண்டும். அப்பொழுது தான் அதன் மீது இருக்கும் கசப்புத் தன்மை முழுவதும் நீங்கும்.
கற்றாழையை நீங்கள் அறுக்கும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வடியும். இது தான் கசப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் உள்ளே இருக்கும் ஜெல் பகுதியிலும் இருக்கும். எனவே எந்த அளவிற்கு நன்றாக நீங்கள் ஜெல்லை கழுவி கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு கசக்காமல் சூப்பராக இருக்கும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் பொடித்த வெல்லம் 100 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். கற்றாழை ஜூஸ்-க்கு கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கக்கூடாது. வெல்லம், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் காக்கும்.
பின்னர் 10 கிராம் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சுத்தமாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி உடைய தோலை எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் பூண்டை தோலுடன் சேர்ப்பது மிகவும் நல்லது.
எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் ஒரு பகுதியை மட்டும் தோலுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். (இறுதியாக வடிகட்ட வேண்டும் எனவே தோலுடன் சேர்த்தால் ஒன்றும் இல்லை)
எலுமிச்சை தோலிலும் சத்துக்கள் உண்டு. தேன் 2 தேக்கரண்டி அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியை நன்கு ஜூஸாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டி விட்டு அப்படியே குடித்து விட வேண்டியது தான்.
இதனை வெறும் வயிற்றில் குடிப்பது தான் உடல் எடையை குறைக்க உதவும். எனவே காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த ஜூஸை குடித்துவிட்டு வேலையை ஆரம்பித்தால் அன்றைய நாள் முழுவதும் புது உற்சாகம் பிறக்கும்.
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் இதில் சேர்க்கப்பட்டுள்ள எல்லா பொருட்களின் ஆற்றலும் உங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி, நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
முகத்தின் பொலிவை கூட்டும். உடலை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.