அச்சமின்றி தலிபான்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் ஆப்கான் பெண்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்தும், ஆட்சி அதிகாரத்தில் தமக்கு சம உரிமை கோரியும் பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலிபான்கள் நேற்று அறிவித்த 33 பேர் கொண்ட அமைச்சரவையில், ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. 'ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது' என்பதை தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், 'ஆப்கன் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும்' எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.
இந்த காட்சியை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் எடுத்துள்ளார். இந்த படத்தை ஆப்கனின் டோலோ செய்தி நிறுவன செய்தியாளர் ஜாரா ரஹிமி தனது டுவிட்டர் பக்கத்தில், 'தலிபான் துப்பாக்கி முனைக்குப் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் ஆப்கன் பெண்' என எழுதிப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
An Afghan woman fearlessly stands face to face with a Taliban armed man who pointed his gun to her chest.
— Zahra Rahimi (@ZahraSRahimi) September 7, 2021
Photo: @Reuters pic.twitter.com/8VGTnMKsih