ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் : புத்தாண்டிலிருந்து அவதியுறும் ஜப்பானியர்கள்
ஜப்பானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் (09) பிற்பகல் 2.29 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.c
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுனாமி எச்சரிக்கை
குறித்த நிலநடுக்கமானது 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது, இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகாத அதே வேளை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் (ring of fire) ஜப்பான் அமைந்துள்ளது.
இதன் காரணமாகவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது, அந்த வகையில் இந்த ஆண்டின் (2024) புத்தாண்டு தினத்தன்றே ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
200 பேர் பலி
இந்த நிலநடுக்கமானது 7.6 ரிக்டர்களாக பதிவான அதே நேரம், சுமார் 200 பேர்வரை உயிரிழப்பையும் பதிவுசெய்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக சுனாமி அலைகளும் எழுந்துள்ளன, இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்கள் முழுமையாக இன்னமும் மீண்டு வராத நிலையில், தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |