முதன்முதலாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள விதைகள்!
Sri Lanka
Ministry of Agriculture
Economy of Sri Lanka
By Shalini Balachandran
இலங்கையின் விவசாயத் திணைக்களமானது இலங்கையிலிருந்து முதன்முதலாக பலவகையான விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சோளம் ஆகிய விதைகள் இதற்காக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வுகளானது விவசாயத்துறை வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதி
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள இந்த விதைகளுக்கு சர்வதேச நாடுகளில் அதிகளவான கேள்வி காணப்படுகின்றது.
இந்த விதைகளை பதப்படுத்தும் நடவடிக்கையானது விவசாயத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்