சாரதிகள் விதிமீறினால் தப்ப முடியாது : கொழும்பில் டிசம்பர் முதல் 'AI' கெமராக்கள்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கெமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் காவல் பிரதிப் பொலிஸ் மா அதிபரை (டி.ஐ.ஜி) மேற்கோள் காட்டி, கொழும்பு நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சியின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி தெரிவித்தார்.
அஞ்சல் மூலம்
மேலும், இந்தக் கெமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் கண்டு, அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அபராத அறிவிப்புகளை அவர்களின் வீடுகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது விபத்துக்கள் நடைபெறுவதை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |