நடுவானில் இயந்திர கோளாறு! பீதியில் அலறிய பயணிகள் - கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
India
By Vanan
நடுவானில் இயந்திர கோளாறு
சார்ஜாவில் இருந்து கேரளா சென்ற ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து 222 பயணிகள், 7 பணியாளர்களுடன் கேரளா சென்ற ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் இன்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹைட்ராலிக் பழுது காரணமாக விமான இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் பீதியில் அலறினர்.
சிறிது நேரம் பரபரப்பு

ஆனாலும், விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கொச்சி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கொச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டு நிலைமை சீரானவுடன் இரவு 8.22 மணியளவில் முதல் இண்டிகோ விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இதனால் கொச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 10 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி