அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்
மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் (Air France) ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏர் பிரான்ஸ் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மீண்டும் ஆரம்பம்
இதன் படி, இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மற்றும் லெபனானின் பெய்ரூட் (Beirut) ஆகிய நகரங்களுக்கிடையிலான விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களின் நிலைமைகள் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு பதிலடி
இந்த நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பினால் லெபானான் முழுவதிலும் ஹிஸ்புல்லாக்களை இலக்காக கொண்டு பேஜர் வெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்பபட்டது.
அதில், ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் 2000 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதன் காரணமாக லெபனானின் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு பதிலடி நிச்சயம் என அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |