இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏர் ரைபிள் துப்பாக்கிகள்
Mahinda Amaraweera
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவால் விவசாயிகளுக்கு 268 வான் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கி வழங்கி வைப்பானது அங்குனுகொலபலஸ்ஸேவில் விவசாய அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மேலும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளமையால் இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக சேதம்
அத்தோடு, மயில், குரங்கு, மர அணில் போன்ற விலங்களினாலேயே பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஏர் ரைபிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்