கண்டியில் விமான நிலையம் - வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்
முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் கண்டியில் விமான நிலையம் ஒன்றை அமைக்க முடியும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அண்மையில் நுவரெலியா - சீதாஎலிய ஆலயத்துக்கு சென்றிருந்த போது, இந்தியாவிலிருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகள், கண்டியில் விமான நிலையம் ஒன்று அமைக்கப்படுமாக இருந்தால் அது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சாதகமாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
கண்டியில் விமான நிலையம்
அத்துடன் அவ்வாறான விமான நிலையம் ஒன்று அமைக்கப்படுமாயின் நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் சுற்றுலாப் பயணிகளை சீதாஎலிய ஆலயத்துக்கு அழைத்து வர முடியும் எனவும், குறித்த இந்திய சுற்றுலாப் பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் கண்டியில் புதிதாக விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான போதிய நிதி வசதி அரசாங்கத்திடம் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் இதன் போது பதில் அளித்துள்ளார்.
எவ்வாறாயினும் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் அதற்கான உதவிகளை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
