தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷடம்
Tamils
Lottery
Canada
By Vanan
ஜீவகுமார் சிவபாதம் எனும் தமிழர் ஒருவருக்கு கனடாவில் அதிர்ஷட லாபச்சீட்டின் மூலம் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை Ontario Lottery and Gaming Commission வெளியிட்டுள்ளது.
அஜக்ஸ் நகரைச் சேர்ந்தவர் இவருக்கு லொட்டோ மேக்ஸ் ட்ராவில் (கனேடிய டொலர் $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து ஜீவகுமார் சிவபாதம் கூறுகையில்,
இது எனது முதல் பெரிய வெற்றி. நான் என் அதிர்ஷட லாபச்சீட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது.
ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு.
பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
