உயர்தரப் பரீட்சை இடம்பெறாது: புதிய திகதிகள் அறிவிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (27) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை - டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பரீட்சைத் திகதிகள்
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் (நவம்பர் 27) மற்றும் நாளைய தினம் (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என இந்திக்க லியனகே குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 3 மணி நேரம் முன்