அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல் - தமிழ்நாட்டில் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தற்போது சென்னைக்கு (Chennai) 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (26.11.2025) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
கரையைக் கடக்கும்
இது புதன்கிழமை நள்ளிரவு வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், இன்னும் 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் புயலாக நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 3 மணி நேரம் முன்