இந்தியாவில் சிக்கிய அல் கொய்தா பயங்கரவாதிகள்
அல் கொய்தாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நாக்கு தீவிரவாதிகள் இந்திய குஜராத் மாநில உளவுத்துறையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி நாணய வர்த்தகம் மற்றும் அந்த பயங்கரவாத அமைப்பின் வாதங்களைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, முகமது ஃபாயிக், முகமது ஃபர்தீன், சேபுல்லா குரேஷி மற்றும் ஸீஷான் அலி என்ற தீவிரவாதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல் கொய்தாவின் வாதங்கள்
இவர்கள், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மென்பொருள் பயன்பாடுகள் வழியாக அல் கொய்தாவின் வாதங்களை பரப்பியதுடன், தங்களின் தொடர்புகளைக் கையாள “ஆட்டோ-டிலீட்” செயலிகள் (self-erasing apps) மூலம் தங்களை மறைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குஜராத் ATS அதிகாரிகள், இவர்களை தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான சந்தேகமான உரையாடல்களில் ஈடுபட்டிருந்தமையை கண்காணித்திருந்தாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
அந்த உரையாடல்களின் அடிப்படையில், இவர்கள் அல் கொய்தாவுடன் நீண்ட காலமாக தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
தற்போது இவர்கள் நால்வரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
