மதுபானங்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் : உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்!
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி வீதம் குறைவாக உள்ளதென அந்த ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரிகள் உயர்த்தப்பட வேண்டும்
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும்.

மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும்.
Taxes that increase #alcohol prices by 50% would help avert over 21 million deaths over 50 years and generate nearly US$17 trillion in additional revenues for governments.
— World Health Organization (WHO) (@WHO) December 6, 2023
More information:https://t.co/AxNsxOMoWb pic.twitter.com/f8mq0F7M5q
உயிரிழப்போரின் வீதம் அதிகரிப்பு
மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.

80 இலட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் உயிரிழகின்றனர்.
மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும்.
ஆரோக்கியமான தயாரிப்புகளுக்கான ஊக்குவிப்பு
இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.

ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.
மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது.
மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்