புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது
பிரதான வீதியில் புறாக் கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.
டாக்ஸி சாரதி கைது
சம்பவம் தொடர்பில் 50 வயதான டாக்ஸி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியில் புறாக் கூட்டத்தின் மீது காரை செலுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தை பார்த்தவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறா பண்ணை இருந்த இடத்திலிருந்து மணிக்கு கிட்டத்தட்ட 60 கிலோமீற்றர் வேகத்தில்அவர் காரை ஓட்டிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் புறா ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்