முடிவிற்காக காத்திருக்கும் அலி சப்ரி - சிக்குவாரா மைத்திரி?

srilanka maithripala sirisena
By Vasanth Apr 06, 2021 02:00 AM GMT
Report

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து மொஹான் பிரீஸ், அரசியலமைப்புக்கு முரணாக நீக்கப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இது குறித்து மேலும் தெரிய வருகையில், இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் பிரதம நீதியராக இருந்த மொஹான் பீரிஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்ற பின்னர் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து அகற்ற முடியும் என நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது நீதி அமைச்சர் அலி ஷப் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முறையற்ற நடத்தை அல்லது இயலாமை தொடர்பான ஆதாரங்கள் இருக்குமாயின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும் எனவும் அலி ஷப்ரி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளைப் பின்பற்றியே பிரதம நீதியரசர் பதவியில் இருந்து முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீக்கப்பட்டிருந்தார் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கியதை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரது பதவி நீக்கமானது அரசியலமைப்புக்கு உட்பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் அலி ஷப்ரி கூறியுள்ளார்.

அதன்பின்னரே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மொஹான் பீரிஸ்சை நாட்டின் பிரதம நீதியரசராக நியமித்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, புதிய நீதியரசர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆகவே நாடாளுமன்ற அங்கீகாரம் இன்றி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொஹான் பீரிஸ்சை பதவி நீக்கியதாகவும் அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்