அரசியல் கைதிகள் எவருமே சிறைகளில் இல்லை - நீதி அமைச்சர் பகிரங்கமாக அறிவிப்பு
Parliament
Prisons
Ali Sabry
By Vasanth
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை - பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர்.
இருப்பினும் எவ்வித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களை தடுத்து வைக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் .
எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
எனினும் இதுவரையில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி