பாடசாலை மாணவர்களுக்குரிய பரீட்சைகள் : கல்வி அமைச்சின் அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்ட போதிலும், அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதி கல்வி அமைச்சர் அறிவிப்பு
கல்வித்துறையானது தேசிய சக்திக் கொள்கைகளுக்கு (National Energy Policies) ஏற்ப தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தற்போதைய சூழல் பரீட்சைகளைத் தாமதப்படுத்தும் அளவுக்கு இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என பிரதி கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படும் போதிலும், தற்போதைக்கு பழைய திட்டமே நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |