ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கும் ரஷ்யா! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கை
ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உக்ரைனின் இராணுவ உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஒலெஹ் இவாஷ்சென்கோவுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா தனது சொந்த அறிவியல்-தொழில்நுட்ப மற்றும் மின்னணு உளவு (signals and electronic intelligence) திறன்களைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கில் உள்ள பங்காளிகளிடம் இருந்து பெறப்பட்ட சில தரவுகளுடன் ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது" என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
There is growing evidence that the Russians continue to provide the Iranian regime with intelligence support. This is clearly destructive activity, and it must be stopped, as it only leads to further destabilization. All decent states are interested in guaranteeing security and… pic.twitter.com/tg1WwPnb6n
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 23, 2026
போரை நீட்டிக்கும்
இத்தகைய ஒத்துழைப்பு மத்திய கிழக்கில் நடைபெறும் போரை நீட்டிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பு மார்ச் 15 அன்று இடம்பெற்ற ஒரு நேர்காணலில் ஜெலென்ஸ்கி, ரஷ்யா ஈரானுக்கு ஷாஹெட் (Shahed) வகை ட்ரோன்களை வழங்கியுள்ளதாகவும், அவை அமெரிக்க தளங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதாக அப்போதே அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |