நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரென கூட்டமைப்பு அறிவிப்பு
சர்வகட்சி அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் மாத்திரம் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும், கடந்தகால ஏமாற்றங்களை பாடமாக்க கொண்டு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்க தயாராகவில்லையெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டமைப்பின் தலைவர் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர்,
சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயார்
“நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் சர்வ கட்சியின் தேவையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனில் நாங்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியும், நாட்டின் சூழ்நிலை கருதியும் சில நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாராக உள்ளோம்.
தமிழர் அரசியல் தீர்வுகளில் கிடைத்த ஏமாற்றம்
ஆனால் கடந்த காலங்களில் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுகளில் அவர்களை ஏமாற்றியுள்ளனர்.
இதனை நல்ல அனுபவமாகக் கொண்டுள்ளதால், யாரிற்கும் நாங்கள் எழுந்தமானமாக ஏமாற்றுத்தனமாக ஆதரவு தருவதற்கு தயாராக இல்லை”என்றார்.
நாடாளுமன்ற உரை
தொடர்புடைய செய்தி
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டமைப்பு |
