வவுனியா மாநகரசபையின் முதல்வரும் பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான
பழிவாங்கலை மேற்கொண்டு தொழில்செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இலங்கை
தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம்
சாட்டியுள்ளார்.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட மாடு அறுக்கும் தொழுவம் தொடர்பாக இன்று
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மாநகரசபை முதல்வர்
வவுனியா மாநகரசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்தமையால் எனது தொழில் மீது
அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகின்றது.

மாநகரசபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாட்டுத்தொழுவத்தின் குத்தகைதாரர் என்ற
அடிப்படையில் வருடாவருடம் சபைக்கு செலுத்தவேண்டிய தொகையை உரியவாறு செலுத்தியே
வருகின்றேன்.
இந்த நிலையில் சபை ஆரம்பித்து சில நாட்களிலேயே மாநகரசபை உத்தியோகத்தர்களின்
பங்களிப்பு இல்லாமல் சபையின் பிரதிமுதல்வர் தனிப்பட்ட ரீதியில்
மாட்டுத்தொழுவத்திற்கு சென்று எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை புகைப்படம்
எடுத்தார்.
அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமையால் தொழில் ரீதியாக பல்வேறு
அசௌகரியங்கள் எனக்கு ஏற்ப்பட்டுள்ளது.
மாட்டுத்தொழுவம் தூய்மை இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குற்றச்சாட்டு
அந்த தொழுவம்
முற்றுமுழுதாக மாநகரசபைக்கே உரியது. நாங்கள் அதனை குத்தகைக்கே எடுத்துள்ளோம்.
எனவே அது தொடர்பான அனைத்து விடயங்களும் மாநகரசபையே செய்துதர வேண்டும்.

தற்போது சபையின் முதல்வர் புதிய ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். இங்கிருந்து
கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களுக்கு இறைச்சி கொண்டுசெல்லக்கூடாது எனவும்
உயிருடன் மாடுகள் கொண்டுசெல்லக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரிடம் கேட்டபோது, நான் சொல்வது தான் சட்டம். நான்
நினைத்தால் தொழுவத்தை திறக்கவும், மூடவும் முடியும் என்று பொறுப்பில்லாமல்
பதில் அளிக்கிறார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.