அர்ச்சுனா எம்.பி மீது அடுக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள்!
இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறுவதற்கே வெட்கமாக இருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேதனைகளோடும் வலிகளோடும் போராடும் தாய் மார்களை இழிவு படுத்தம் விதமான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளதை மேற்கொற்காட்டி அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இந்த தாய்மார்கள் இரண்டாயிரம் ரூபா பணத்திற்காகவும் பட்டு சேலைக்காகவும் இவ்வாறான போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் பொறுப்பு மிக்கவராக நடந்து கொள்ளவேண்டும் எனவும் போராடும் மக்கள் மீது வீணான வசைகளை பாடக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு, ஜெனிவாவுக்கு சென்று தனது தனிப்பட்ட பிரிச்சினைகளுக்காக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா, தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் அல்ல என்றும் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் அர்ச்சுனா மீது அடுக்கிய குற்றச்சாட்டுக்கள் பின்வரும் காணொளியில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
