மின்சார சபையில் குடும்ப ஆதிக்கம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை மின்சார சபையில் குடும்ப ஆதிக்கம் நிலவுவதாக மின்பாவனையாளர் சங்கம் குற்றம் சாட்டிள்ளது.
குறித்த குற்றச்சாட்டை மின் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல முன்வைத்துள்ளார்.
இலங்கை மின்சார சபையில் நிலவும் முறைகேடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திறமையான அதிகாரிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மின்சார சபையில் திறமையான அதிகாரிகள் போதுமானளவில் இருக்கின்றனர்.

அவர்களைப்புறம் தள்ளி மின்சார சபையின் உயரதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மின்சார சபையில் புதிய நியமனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மின்சார சபை
இவ்வாறான சட்டவிரோத நியமனங்களை மின்சார சபை நிர்வாகம் கைவிட வேண்டும்.

இல்லையேல் மின்சார சபை ஊழியர்களுடன் இணைந்து மின் பாவனையாளர் சங்கம் அதற்கெதிரான போராட்டமொன்றை முன்னெடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11