ஜூலை மாத வருவாயில் சாதனை படைத்த இலங்கை சுங்கம்
ஜூலை மாதத்தில் இலங்கை சுங்கம் 235 பில்லியன் ரூபாய்களை மாதாந்த வருவாயாக வசூலித்து சாதனை படைத்துள்ளது என சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய சுங்கப் பதிவு மற்றும் அறிவிப்பு முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு, இதனை தெரிவித்த அவர், இது இதுவரை இல்லாத அளவுக்கு ஈட்டப்பட்ட மாதாந்த வருவாயாகும் எனவும் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி
இந்த சாதனை ஒரு வரலாற்று மைல்கல் என்றும், 2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாய்களை பெறுவதுகூட ஒரு பெரிய சாதனையாகக் கருதப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி இந்த சாதனை வருவாயில் மிகப்பெரிய பங்கை அளித்துள்ளது.
தற்போதைய புதிய அமைப்பு, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான வசதியை மேம்படுத்தும் எனவும், சுங்கத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் என்றும் சுனில் நோனிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

