சுமந்திரன் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

srilanka aluthgamage mahindananda
By Vasanth Apr 02, 2021 11:18 AM GMT
Report

சிறைத்தண்டனை அனுபவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நியாயம் வழங்குமாறு ஆளும் தரப்பின் சார்பில் தனிநபர் பிரேரணையை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாக்கும் நோக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் மேலும் குறிப்பிடுகையில். நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ரஞ்சன் ராமநாயக்க 2016 ஜூன் 16 ஆம் திகதி எனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் உளவியல் ரீதியிலும், சமூதாய ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டேன். 500 மில்லியன் நஷ்டஈடு கோரி நுகேகொடை நீதிமன்றில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் சுய தேவைக்காக இவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். குறிப்பிட்ட ஒரு தரப்பினர் தங்களின் சுய தேவைக்காக இவரை தவறாக வழி நடத்தினார்கள். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக இவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது அவர் செய்த தவறுகளை உணர்ந்து உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக நான் தாக்கல் செய்த வழக்கு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

என்மீது ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்பதால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். எனவே தற்போது அவர் அனுபவிக்கும் சிறை தண்டனை இரட்டிப்பாகும்.

எனினும் என்மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் கவலையை வெளியிட்டார்.

தவறை உணர்ந்ததால் அவருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை மீள பெற்றுக் கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்கினேன்.

அரசியலில் பழிவாங்க வேண்டிய தேவை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை இவரே முன்வைத்தார்.

இதனை கொண்டு தற்போது பழிவாங்க வேண்டிய தேவை கிடையாது. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 103 சாட்சியாளர்கள் இருந்தார்கள்.

இவருக்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 3 சாட்சியங்களை மாத்திரம் பரிசீலித்தார்.

அனைத்து சாட்சியங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியிருந்தால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நியாயம் வழங்கப்பட்டிருக்கும்.

ஜெனிவா விவகாரத்தில் இவ்விடயங்களை காண்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் நோக்கம் அவருக்கு காணப்பட்டது.

இன்று இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கவலையடைகிறார். இவருக்கு நியாயம் வழங்க ஆளும் தரப்பு சார்பில் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026