பிரதேசத்தையே உலுக்கிய கொடூர இரட்டைக்கொலை - ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்!
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்து, குறித்த சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து கோடரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் 61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற தம்பதியே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.