சிறையில் வெடித்த வன்முறை! நீதி அமைச்சரை பதவி விலக வலியுறுத்து
நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலுக்கு அரசாங்கத்தின் சார்பாகப் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தபோதிலும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, அமைச்சர் பொறுப்பேற்பதாக வெறுமனே கூறுவதால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அழிவு
அத்தோடு, வெலிக்கடை சிறைச் சம்பவத்தில் நடந்தது போல, ஆட்சியாளர்களின் இரகசியங்களைக் காக்க கைதிகள் இங்கும் கொல்லப்படுகிறார்களா என்பது குறித்தும் அவர் கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

இதேவேளை, சிறை அமைப்புமுறை குறித்து நல்ல புரிதல் கொண்ட திறமையான அதிகாரிகள் நீக்கப்பட்டதாலும், நிர்வாகம் பலவீனப்படுத்தப்பட்டதாலும் இந்த அழிவு நிகழ்ந்துள்ளது என்றும், இதற்கான பொறுப்பிலிருந்து அமைச்சர் தப்பிக்க முடியாது என்றும் தொலவத்த கூறியுள்ளார்.
நீதி அமைச்சரின் பதவி
மேலும் இது குறித்துக் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இழந்த மனித உயிர்களை அமைச்சரால் மீட்டெடுக்க முடியாது என்பதால், பொறுப்பேற்பதாகக் கூறுவது அர்த்தமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி இதற்கு முன்னர் அப்போதைய அரசாங்கங்கள் மீது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டியதை நினைவு கூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், நீதி அமைச்சருக்கு இனி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமை இல்லை என்றும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |