நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதனடிப்படையில் குறித்த எச்சரிக்கையானது இன்று (23-11-2026) பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |