நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர் நிற மின்னல் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த ஏப்ரல் ஆறு காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் 24 மணிநேரத்திற்கும் குறைவான காலம் உள்ள நிலையில் மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதேபோல இலங்கையின் கிறிஸ்தவ மக்களின் இன்றைய உயிர்த்த ஞாயிறு பண்டிகை, 2019 ஈஸ்டர் தாக்குதல்களின் ஏழாம் ஆண்டு நினைவுடன் இன்று கடந்தாலும் அன்றைய நாள் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற அதிர்வுகள் இன்றைய நாளிலும் தொடர்ந்தன.
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர்விமானத்தில் காணாமல் போயிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அதிகாலை தெரிவித்த கையுடன் ஈரானின் அரசுத் தொலைக்காட்சி தமது இஸ்பஹான் நகரில் அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளும் ஒரு சி-130 ஹெர்குலிஸ் இராணுவப் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகப் பதிலடியாக அறிவித்தது.
மீட்பு நடவடிக்கை
கடந்த வெள்ளியன்று சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 ஸ்ட்ரைக் ஈகிள் போர்விமானத்தில் காணாமல் போன அமெரிக்க விமானி ஒருவரை மீட்கும் மீட்பு நடவடிக்கையில் குறித்த விமானங்கள் சுடப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டாலும் ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் சுடப்பட்டபோது காணாமல் போன விமானி காயமடைந்த நிலையில் ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் தஞ்சம்புகுந்திருந்த நிலையில் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட விமானியின் இருப்பிடம் ஈரானுக்குத் தெரியாமல் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு இந்த மீட்பு இடம்பெற்றதாகவும் இதில் பல விமானங்கள் ஈடுபட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்ட போதும் தமது தரப்பில் இரண்டு பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளும் ஒரு ஹெர்குலிஸ் விமானமும் இழக்கப்பட்டமை குறித்து அவர் ஏதும் குறிப்பிடாத நிலையில் இந்த விடயங்களுக்கு அப்பால் உள்ள பரபரப்புகளை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |