நாளாந்தம் கிடைக்கும் 5000 இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்
daily
ambulance
telephone
By Sumithiran
நாளாந்தம் 1990 அம்பியுலன்ஸ் சேவைக்கு 5300ற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் கிடைப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அழைப்புக்களின் ஊடாக நாளொன்றில் ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
நாடளாவியரீதியில் 297, சுவசரி அம்பியுலன்ஸ் வண்டிகள் காணப்படுவதுடன், 1394 ஊழியர்கள் அவற்றில் கடமையாற்றி வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எனினும், 112 அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கான தேவை காணப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி