பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான சுகாதார சேவை: வெளியான அறிவிப்பு
பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுகாதார செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுவாக பண்டிகைக் காலங்களில் விபத்துகள், உணவு விஷம் மற்றும் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
தொற்றாத நோய்கள்
விபத்துக்கள், உணவு விஷமான சம்பவங்கள் மற்றும் தொற்றாத நோய்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு துரித சேவைகளை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர காலங்களில் சேவைகளை வழங்க அவசர ஊர்தி சேவைகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக பாலித மஹீபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |