சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ : 64 பேர் பலி!
அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அந்த நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் எச்சரித்துள்ளார்.
தீ விபத்து
சிலியில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
❗??? - Drone footage showing the absolute devastation caused by the forest fires in Chile.
— ??The Informant (@theinformantofc) February 4, 2024
To date, 51 deaths have been confirmed, many are missing and thousands of homes have been destroyed! pic.twitter.com/n1SazTlw6E
இதனால் சுமார் ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
தீ பரவல்
தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் தீ பரவியதால் இதுவரை சுமார் 46 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |