நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்: அமெரிக்காவில் சம்பவம்
United States of America
World
By Dhilak
அமெரிக்காவில் 5 பேர் பயணித்த சிறிய ரக விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம், அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் விமானத்தில் பயணித்த ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள்
அத்தோடு, கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நேபிள்ஸ் நகர இன்டர்ஸ்டேட்-75 (Interstate-75) நெடுஞ்சாலையில், பைன் ரிட்ஜ் சாலை பகுதியில் வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய வான்வழி போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி