ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நகர்வு! விதிக்கப்பட்ட புதிய தடை
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலுக்கு ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டி இந்த தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Persian Gulf Marine Insurance Company மற்றும் HormuzSafe Marine Services Authority ஆகிய இரு நிறுவனங்களும், ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களிடம் இருந்து பணம் அறவிடும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை சார்ந்த மிரட்டிப் பறிக்கும் திட்டத்தின் முக்கிய பிரிவாக செயற்படுவதாக அமெரிக்க திறைசேரி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானால் உருவாக்கப்படும் அபாயங்கள்
ஈரான் இந்த முக்கிய நீர்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயல்வதால், இங்கு தடையற்ற மற்றும் திறந்த போக்குவரத்தை மீண்டும் உருவாக்குவது அமெரிக்காவுக்கு ஒரு பாரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது.

அமெரிக்க திறைசேரியின் தகவல்படி, இந்த நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு, கப்பல்களைப் பறிமுதல் செய்வது போன்ற பெரும்பாலான ஈரானாலேயே உருவாக்கப்படும் அபாயங்களுக்கு துணைபோவதாக கூறப்படுகிறது.
நிழல் கப்பற்படை
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அந்நாட்டின் பயங்கரவாதம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கொண்டு செல்ல உதவும் நிழல் கப்பற்படை கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |